Contact Us @ pondy.tour@gmail.com

Nov 30, 2007

மனிதநேயத்தின் எதிர்காலம்

மனிதநேயத்தின் எதிர்காலம்
ஆன்மிக வளாகம் - ஆரோவில், புதுச்சேரி

பாண்டம் செய்பவர்கள், மெழுகுவர்த்தி செய்பவர்கள், நறுமண கலைஞர்கள் அனைவறும் தத்தமது இடங்களில் வேலை செய்கிறார்கள். இந்த டவுன்ஷிப்பில் ஒரு வேளையில் 10,000 பேருக்கு உணவளிக்ககூடிய சூரிய ஒளியில் இயங்கும் சமையலறை இருக்கிறது. ஆரோவில் வளாகம் யாருக்கும் சொந்தமில்லாத, ஆனால் மனித சமூகத்திற்கே சொந்தமான ஒன்று. அரவிந்தரின் சீடர் மிர்ரா அல்ஃபாஸாவால் 1930களில் உருவாக்கப்பட்ட ஆரோவில் மனித ஒற்றுமை குறித்த பரீட்சார்த்த முயற்சிகளில் இறங்குகிறது. எதிர்கால மனித சமுதாயத்திற்கு மிகவும் முக்கியாமான திட்டம் என்று 1966ல் யுனெஸ்கோ இதைப் பாராட்டியது. 1968ல் தொடங்கப்பட்ட் இந்த டவுன்ஷிப்பில் இன்று 1700 பேர் வசிக்கிறார்கள். அதில் 600 பேர் இந்தியர்கள். எக்கச்சக்கமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள் என்றாலும் இது சுற்றுலாத் தலம் என்று அவர்கள் சொல்வதில்லை. எல்லோரும் இங்கு தங்கி, பங்கேற்பதையே இவர்கள் ஊக்குவிக்கிறார்கள். இயற்கை வேளாண்மை, நடனம், வெளிச்சம், ஒளி, தியானம் என பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு செய்வதற்கு இங்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. ஒரு மதம் அல்லது பிரிவு என்ற எல்லைக்குள் அடங்கிவிடாமல் ஒரு உன்னத்மான சமூகத்தை உருவாக்கி, உள்ளூர் மக்களூடன் சுமுகமாக வாழ முடியும் என ஆரோவில் இந்த உலகுக்கு உணர்த்தியிருக்கிறது. அந்த வகையில் உலகிலேயே இப்படிப்பட்ட பரீட்சார்த்த முயற்சி இது ஒன்றுதான்.

நன்றி : இந்தியா டுடே (சிறந்த இந்திய தலங்கள் - சிறப்பிதழ்)

0 comments:

Post a Comment